
இலங்கைக்கு உதவிகளை வழங்குவது குறித்து அமெரிக்க உயர் அதிகாரிகள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அமெரிக்க அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் இலங்கை அரசாங்க அதிகாரிகளுடன் நேற்றைய தினம் கொழும்பில் விசேட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அமெரிக்க வெளிநாட்டு கடன் வள அலுவலகப் பணிப்பாளர் ஹாரி சாஸ்திரி தலைமையிலான குழுவினர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர்.
வெளிநாடுகளுக்கு அமெரிக்கா உதவி வழங்குவது குறித்த தீர்மானங்களை எடுக்கும் முக்கிய அதிகாரிகளில் ஒருவராக சாஸ்திரி கருதப்படுகின்றார்.
இலங்கை மக்களுக்கு எவ்வாறான உதவிகள் அவசியம் என்பதனை நேரடியாக கேட்டு அறிந்துகொள்வதற்காக சாஸ்திரி இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். கடந்த ஆண்டு அமெரிக்கா இலங்கைக்கு சுமார் 40 மில்லியன் டொலர்களை உதவியாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.