இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தொலைபேசியில் ஊடாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதன்போது இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை ஆதரவளிக்கும் என்று பொதுச் செயலாளர் உறுதிமொழி வழங்கியுள்ளார்.
பிரதமராக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து வெளியிட்ட பான் கீ மூன், பொதுத்தேர்தல் அமைதியாக நடத்தப்பட்டமை மற்றும் அதிகளவான மக்கள் வாக்களிப்பில் பங்கேற்றமைக் குறித்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் புதிய அரசாங்கம், தேசிய ஒற்றுமை மற்றும் நீடித்த அமைதிக்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பன் கீ மூன் கோரியுள்ளார்.