இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு ஏன் அவசியப்படுகிறது?: மன்னாரில் விளக்கம்

331
அரசியலமைப்பு மாற்றத்திற்கான பிரஜைகளின் முயற்சி எனும் தொனிப்  பொருளில்  மக்களை தெளிவூட்டும் கலந்துரையாடல் ஒன்று தலைமன்னார் வீதியில் அமைந்துள்ள மொழிகள் வள நிலையத்தில் நேற்று  நடைபெற்றது.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் ஏற்பாடு செய்திருந்த புதிய அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக தெளிவூட்டும் கலந்துரையாடலை அந் நிலையத்தின் சிரேஸ்ட ஆய்வாளர் லயனல் குருகே நடத்தியிருந்தார்.

இக் கலந்துரையாடலில் சமூக ஆர்வலர்கள், மாதர் அமைப்பின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டர்.

இதன்போது குறித்த புதிய அரசியலமைப்பு ஏன் அவசியம், அதன் விளைவுகள், அரசியலமைப்பு என்றால் என்ன?, அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்படவேண்டடிய விடயங்கள், புதிய அரசியலமைப்பின் உருவாக்கம் தொடர்பாக பொது மக்கள் எவ்வாறு கருத்து தெரிவிக்க வேண்டும், இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு ஏன் அவசியப்படுகிறது? போன்ற பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு அவைகள் தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

SHARE