இலங்கைக்கு அனைத்து வழிகளிலும் உதவியளிக்கவுள்ளதாக அமெரிக்கா மீண்டும் தெரிவித்துள்ளது.
அமரிக்காவின் ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இந்த கருத்தை ஐக்கிய நாடுகளின் சபை அமர்வுக்காக சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் செல்லும் வழி தொடர்பில் அமெரிக்கா தமது வரவேற்பை வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் நடைமுறை அரசாங்கம் பொருளார வளர்ச்சி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது என்று இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரை, அந்த அரசாங்கத்துக்கு வடக்கிலும் தெற்கிலும் பாரிய சவால்கள் தொடுக்கப்படுகின்றன.
இதற்கு உதாரணமாக, வடக்கில் உள்ள சிலரை. தமது சொந்த இடங்களுக்கு திரும்பவேண்டாம் என்று தீவிரவாதக்குழுக்கள் அழுத்தம் கொடுக்கின்றன.
மறுபுறத்தில் தென்னிலங்கையில் நல்லிணக்கத்துக்கு எதிராக நடவடிக்கைகள்முன்னெடுக்கப்படுகின்றன.
எனினும் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் அரசாங்கம், தமது நிகழ்ச்சித்திட்டத்தைமுன்னெடுத்துச்செல்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.