இலங்கைக்கு மீண்டும் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் ஈரான் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

284

download (1)

ஈரான் மீண்டும் இலங்கைக்கு பெற்றோலிய எண்ணெயினை ஏற்றுமதி செய்யவுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

ஈரானுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குவதுடன் ஈரானிலிருந்து பெற்றோலிய எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு முதல் ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடையின் காரணமாக இலங்கை அரசு எண்ணெய் இறக்குமதியை தடைசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான விசேட சந்திப்பொன்று இலங்கையின் பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடிக்கும், ஈரானின் பெற்றோலிய வள அமைச்சருக்கும் இடையில் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து பெற்றோலிய இறக்குமதி தொடர்பான ஒப்பந்தம் ஒன்று இரண்டு நாடுகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெற்றோலிய இறக்குமதியால் இலங்கை அதிகம் நன்மையினைப் பெற்றுக்கொள்ளும் என்றும் பெற்றோலிய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

SHARE