இலங்கை அரசாங்கத்திற்கு அவசியமான அனைத்து ஆதரவுகளையும் வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
அபிவிருத்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு உட்பட பல அவற்றில் உள்ளடக்கப்படும் என் அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் ராபின் மூடி தெரிவித்துள்ளார்.
இருதரப்பு வர்த்தகம் பெறுமதி தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகின்றதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்வி துறையில் இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் அதிக தொடர்புள்ளதாக அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.