இலங்கைக்கு செல்லும் தமது நாட்டவர்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்து பிரித்தானிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் 8ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 19 ஆயிரத்து 419 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்த நிலையில், இலங்கை செல்லும் தமது நாட்டவர்கள் டெங்கு நோய் குறித்து முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பிரித்தானிய அரசாங்கம் அறிவுரை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.