இலங்கையர்களால் சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்டுள்ள பணத்தின் பெறுமதி எவ்வளவு?

195

கடந்தாண்டில் சுவிஸ் வங்கியில் 307 மில்லியன் சுவிஸ் ப்ராங்க் இலங்கையர்களின் சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுவிஸ் தேசிய வங்கியினால் வெளியிடப்பட்ட புதிய புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

உலகெங்கிலுள்ள வெளிநாட்டு வாடிக்கையாளர்களால் சுவிஸ் வங்கியில் சேமிக்கப்பட்டுள்ள பணத்தின் தொகையில் சிறிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. புதிய புள்ளிவிபரங்களின் அடிப்படையில் 1.41 ட்ரில்லியன் சுவிஸ் ப்ராங்கில் இலிருந்து 1.42 ட்ரில்லியன் வரை அதிகரித்துள்ளது.

சுவிஸ் வங்கியில் இந்தியர்களால் முன்னெடுக்கப்பட்ட கணக்குகள் சில நிறுத்தப்பட்டுள்ளன.

இதன் பின்னரான பணப் பெறுமதியின் அடிப்படையில் இந்தியா 88 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பிரித்தானியா முதலிடத்தில் உள்ளது.

BRICS நாடுகளின் பட்டியலுக்கமைய இந்தியா மிகக் குறைவான இடத்தில் உள்ளது. ரஷ்யா 19 வது இடத்திலும் சீனா 25 வது இடத்திலும் , பிரேசில் 52வது இடத்திலும் தென்னாப்பிரிக்கா 61வது இடத்திலும் உள்ளதாக அந்த புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த ஐந்து நாடுகளில், சீனா மட்டுமே உயர்ந்த இடத்தில் உள்ளது. மொரிஷியஸ், ஈரான், மொரோக்கோ, கென்யா, நைஜீரியா, கஜகஸ்தான், உக்ரைன், அங்கோலா, பிலிப்பைன்ஸ், மலேசியா, இந்தோனேசியா, கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகள் இந்தியாவை விட முன்னணியில் உள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளில் பங்களாதேஷ் 89 வது இடத்தையும், நேபாளம் 150 வது இடத்தையும், இலங்கை 151வது இடத்தையும், பூட்டான் 282வது இடத்தையும் பிடித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

SHARE