இலங்கையர்களின் இரத்தமாதிரிகளை பெறுவதற்கு யாழ்ப்பாணத்துக்கு வந்திருக்கும் அமெரிக்க வைத்தியர்களுக்கு எவ்வாறு எந்த நெறிமுறையின்கீழ் அனுமதி வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது
தேசிய பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்கள் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளனர்.
இந்தக்குழுவின் தலைவர் வைத்தியர் ச்சன்ன ஜெயசுமான்ன இந்தக்கேள்வியை எழுப்பியுள்ளார்.
தமக்கு கிடைத்த தகவல்களின்படி குறித்த வைத்தியர்கள், விஷ ஊசி ஏற்றப்பட்டதாக கூறப்படும் முன்னாள் விடுதலைப்புலிகளின் இரத்த மாதிரிகளை பெறவுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த இரத்தமாதிரிகளை பெறுவதற்கு அதிகாரிகளின் அனுமதி தேவை.
எனவே இந்த விடயம் தொடர்பில் தாம் சுகாதார அமைச்சிடமும், தேசிய மருத்துவ சபையிடமும் பதிலை எதிர்ப்பார்ப்பதாக வைத்திய கலாநிதி ச்சன்ன ஜேயசுமான்ன தெரிவித்துள்ளார்.