இலங்கையர்களின் நாடு கடத்தலை உறுதி செய்த அவுஸ்திரேலியா!

241

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்த 13 இலங்கையர்கள், கடந்த வெள்ளிக்கிழமை நாடு கடத்தப்பட்டதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

நாடு திரும்பியவர்கள் தடுத்து வைக்கப்படவில்லை என கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

குறித்த இலங்கையர்கள் அவுஸ்திரேலிய சட்டங்களுக்கமைய அகதிகளாக தங்கியிருப்பதற்கு தகுதி அற்றவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறான அவுஸ்திரேலிய சட்டத்திட்டங்களுக்கு அமைய தகுதியற்றவர்கள் திருப்பி அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சட்டவிரோதமாக படகில் வருபவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் குடியேற்றம் வழங்கப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE