இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியா செல்ல சந்தர்ப்பம்

120

தொழில் ரீதியாக அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்துச் செல்ல இலங்கையர்களுக்கு சிறந்த சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக விசேட குடிவரவு சட்டத்தரணி சுசந்த கடுகம்பல தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், அவுஸ்திரேலியாவில் தற்போது திறமையான பணியாளர்களுக்கான தேவை காணப்படுகின்றது.

நாட்டில் திறமையான பணியாளர்களுக்கு பற்றாக்குறை இருப்பதை அவுஸ்திரேலிய அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஒப்புக்கொண்டுள்ளதாக சட்டத்தரணி சுசந்த கடுகம்பல சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அவுஸ்திரேலியாவிற்கு வேலை வாய்ப்புக்காக புலம்பெயர்ந்து செல்ல முடியும்.

திறமையான இடம்பெயர்வு, வணிக இடம்பெயர்வு, முதலாளியினால் வழங்கப்படும் விசாக்கள், குடும்பப் புலம்பெயர்தல் மற்றும் புகழ்பெற்ற அல்லது உலகளாவிய திறமையாளர் பிரிவுகளின் கீழ் இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியாவிற்கு இடம்பெயர்வதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார். – ada derana tamil news

SHARE