இலங்கையர்களுக்கு வளிமண்டலத்திணைக்களத்தின் அவசர எச்சரிக்கை !

98

இலங்கையில் வழமைக்கு மாறாக அதிக வெப்பமான காலநிலை நிலவுவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெப்பத்துடன் கூடிய காலநிலை காரணமாக நாட்டில் 4 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுப்பதன் காரணமாகவே வெப்பநிலை அதிகரித்துள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வெப்பமான காலநிலை இம் மாதம் 7ஆம் திகதி வரை தொடரும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

அதிக வெப்பமான காலநிலை உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடும் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

அதிக வெப்பம் காரணமாக இலகுவாக சருமம் வறட்சி அடையக் கூடும் என்பதால் அதிக நீர் அருந்துவதோடு கடினமான வேலைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதியில் இன்று 30 செல்சியஸ் பாகைக்கும் அதிகமான வெப்ப நிலை நிலவும் என வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE