இலங்கை, ஏனைய நாடுகளுடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படும் நிலையில், இராஜதந்திர உறவுகள் – இதயங்கள், மனம் மற்றும் ஆன்மாக்களின் இணைப்புகளாக மாறவேண்டும் என்று இலங்கையின் முதல் பெண்மணி மைத்திரி விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற அமெரிக்க அமைதிப் படையின் தொண்டர்கள் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளும் நிகழ்விலேயே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது.இலங்கையர்களுக்கான வாய்ப்பு
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“ஒரு தேசத்தின் குணாதிசயம் அதன் புவியியல், காலநிலை, தோற்றம், ஆதிக்கம் செலுத்தும் கலாசாரம், அரசியலில் சமகாலத் தலைவர்கள், மக்களின் திறன் மற்றும் அந்த மக்களால் ஏற்படுத்தப்பட்ட தொடர்புகள், இதயங்கள், மனம் மற்றும் ஆன்மாக்களின் இணைப்புகளைக் கொண்டுள்ளது.
இந்த தேசத்தின் மக்களுக்கு டிஜிட்டல் மாற்றம் வேண்டும், அதுவே தனிப்பட்ட கல்வி சாதனை மற்றும் இயக்கம் மற்றும் பொருளாதார வாய்ப்புகளுக்காக, இலங்கையர்களுக்கு வாய்ப்பாக இருக்கும்.
அமைச்சர் பிரேமஜயந்த சுட்டிக்காட்டியபடி ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் கல்வி வழங்கப்படுகின்ற போதிலும், இந்த தேசத்து மக்களுக்கு டிஜிட்டல் மாற்றத்தை கொண்டு வருவதும் முக்கியமானதாகும்.
இந்தநிலையில் இலங்கைச் சிறுவர்களின் மொழித்திறனை மேம்படுத்துவதற்கு தமது அமைச்சு அமெரிக்க சமாதானப் படையின் ஆதரவைப் பெறவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையர்கள் அமெரிக்காவின் நண்பர்கள் என இலங்கையின் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் அழைப்பு விடுத்துள்ளார்.
எனவே இலங்கை சமூகத்தின் ஒரு அங்கமாக இருங்கள். மற்றும் இலங்கையர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்” என அவர் அமெரிக்க அமைதிப் படை உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்