இலங்கையர் உள்ளிட்டவர்களை நாடுகடத்த பிரித்தானியா திட்டம்!!! இந்தியா நிராகரிப்பு

203

 

இலங்கையர் உள்ளிட்டவர்களை இந்தியாவுக்கு நாடுகடத்தும் இங்கிலாந்து அரசாங்கத்தின் திட்டம் ஒன்றை இந்தியா நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

இந்திய மற்றும் பிரித்தானிய உள்நாட்டு விவகார பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளநிலையில், பிரித்தானியாவில் அகதி அந்தஸ்த்து கோரியுள்ள இந்தியர்களை நாடுகடத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை குறித்த வரைவு ஒன்று இந்தியாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் இந்த வரைவின் கீழ் நாடுகடத்தப்படுகின்ற அகதிகள், பெரும்பாலும் இலங்கை மற்றும் பங்களாதேஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பதாக, இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை மற்றும் பங்களாதேஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவின் கடவுச் சீட்டின் ஊடாக பிரித்தானியா சென்று, தங்களை இந்தியர்களாக அடையாளம் காட்டி அகதி அந்தஸ்த்துக்கு விண்ணப்பிக்கின்றனர்.

அவர்கள் இந்தியர் அல்லாத நிலையில், அவர்களை இந்தியாவுக்கு நாடுகடத்தப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

SHARE