இலங்கையின் அகதிக்கு நேர்மைக்கு மாறான செயற்பாடு இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு

311
இலங்கையின் அகதி ஒருவர் தொடர்பில் நடைமுறை நேர்மை மீறப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய மேல்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எனவே குறித்த இலங்கையரின் அகதிக்கோரிக்கை மனு மீண்டும் பரிசீலனை செய்யப்படவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

2010ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தீவுக்கு சென்ற குறித்த இலங்கை அகதியின் ஒரு தடவை மாத்திரம் ஒலிவாக்குமூலம் பெறப்பட்டுள்ளது

எனினும் இரண்டாவது தடவையாக வாக்குமூலம் பெறப்படவில்லை. இது நடைமுறை நேர்மைக்கு மாறான செயல் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

SHARE