இலங்கையின் ஒரு சில பகுதிகளுக்கு எச்சரிக்கை

195

நாடளாவிய ரீதியில் பல மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசி வருகின்றமையினால் வடமத்திய, மத்திய,மேல் மாகாணத்தின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகும் என அனர்த்த முகாமைத் துவ மத்திய நிலையத்தின் ஊடகப்பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

அதேநேரம் கடற்பரப்பில் நிலைகொள்ளும் காற்றின் வேகம் அதிகரித்துவருவதால் அதன் தாக்கத்தை தெற்கு, சப்ரகமுவ, மத்திய,வடமத்திய மாகாணங்கள் எதிர்கொள்ள நேரிடும் என்றும் வளிமண்டள வியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத் துள்ளது.

எவ்வாறாயினும் காற்று கடற் பரப்பை அண்டிய பிரதேசங்களிலேயே அதிக வேகத்தில் வீசும் என்றும் அது தவிர்ந்த ஏனைய பிரதேசங்களுக்கு அதிக காற்றி னால் பெரும் பாதிப்புகள் ஏற்படாது என்றும் ஆனால் காலி, மாத்தறை பகுதிகளில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய நிலவரங்களின்படி கரையோர பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 தொடக்கம் 70 கிலோ மீற்றர் வரையில் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதா கவும் இதன் தாக்கத்தினால் நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளது.

கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி உள் ளிட்ட மாவட்டங்களில் பிற்பகல் இரண்டு மணியின் பின்னர் சிறிதளவு மழைவீழ்ச்சி தொடர்ச்சியாக பதிவாகியுள்ளதாகவும் ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.srilanka

SHARE