இலங்கையின் கடற்பரப்பில் 4 கோடி ரூபா பெறுமதியான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

146

இலங்கையின் கடற்பரப்பில் வைத்து பெருந்தொகை தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கல்பிட்டி கடற்பரப்பில் வைத்து 4 கோடி ரூபா பெறுமதியான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடல் வழியாக 5.7 கிலோ கிராம் தங்கத்தை கொண்டு செல்ல முயற்சித்த இருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் தினேஷ் பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் சந்தேகத்திற்குரிய முறையில் பயணித்த படகு ஒன்றை கடற்படையினர் சோதனையிட்ட போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எந்த நாட்டிலிருந்து தங்கம் கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பில் இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

SHARE