இலங்கையின் சிறுவர்களுக்கான சட்டமும் சிறுவர் துஸ்பிரயோகமும்

296

இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்ற பொன் மொழிக்கு ஏற்ற வகையில் நமது நாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுமானால், சிறப்பான சூழ்நிலை உருவாக வேண்டுமானால் சிறுவர்களை சரியான தடத்தில் வழி நடத்த வேண்டியது அவசியமாகும்.

அதை புரிந்து கொண்டுள்ள அரசாங்கம் சிறுவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல சுமைகளை தனது தோளின் மேல் ஏற்று கொண்டுள்ளது. சிறுபிள்ளைகள் சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றவாளியாக மாறக்கூடாது.

வளரும் பிள்ளைகளின் நலனை கருத்தில் கொள்ளும் பெற்றோர், அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். அதை கருத்தில் கொண்ட அரசாங்கம் கடந்த 1964ம் ஆண்டே சிறுவர் நலன் தொடர்பாக சட்ட விதிமுறைகளை அமுல்படுத்தியது.

அந்த சட்டத்தின் அடிப்படையில் சிறுவர் பாதுகாப்பு அமைப்பு, சிறுவர் நல அமைப்பு ஆகியவை நடைமுறையில் வந்தது. மேலும் சிறு வயதில் குற்றம் செய்வோரை நீதி மன்றத்தில் நிறுத்தாமல், அவர்கள் மீதான புகாரை விசாரணை நடத்த வசதியாக ‘‘சிறுவர் குற்றவியல் நீதி மன்றம்’’ தொடங்கி செயல்படுத்தி வருகிறது.

மேலும் இச்சட்டத்தில் சில குறைபாடுகள் இருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து கர்நாடக சிறுவர் பாதுகாப்பு நல சட்டத்தில் 1986ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது.

அதிலும் சில குறைகள் இருப்பதை உணர்ந்த மத்திய அரசு ‘‘சிறுவர் அக்கறை மற்றும் பாதுகாப்பு சட்டம் 2000’’ என்ற புதிய சட்டத்தை அமுல்படுத்தியது. குற்ற செயலுக்கு உள்ளான 18 வயதுக்கும் குறைவான சிறுவர்களை இளம் குற்றவாளிகள் என்று அழைக்கப்பட்டு வந்தது.

குற்றவாளி என்ற வார்த்தை சிறுவர்கள் மீது பயன்படுத்துவது சமூகத்தில் தவறான சூழ்நிலையை உருவாக்கும் என்ற நோக்கத்தில் இளம் குற்றவாளிகள் என்ற வார்த்தையை முழுமையாக தவிர்த்து, தவறு செய்த சிறுவர்கள் என்று அழைக்க வேண்டும் என்ற வரம்பு கொண்டு வரப்பட்டது.

அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தின் படி 18 வயது நிரம்பாதவன் சிறுவன் என்று கருதப்படுகிறது. அவன் தவறு செய்யும் பட்சத்தில், அவர் மீதான விசாரணையை சாமானிய நீதிமன்றத்தில் விசாரணை நடத்தினால், மற்ற குற்றவாளிகள் முன் நிறுத்தப்படும் போது, அவர்களின் குற்றமும், சிறுவனுக்கு வேறு விதமான உந்துதலை ஏற்படுத்தும்.

அதை தவிர்க்க சிறுவர் நீதி மன்றம் அமைத்து, அவர்கள் செய்துள்ள குற்றம் தவறானது என்பதை மெல்ல மெல்ல புரியவைக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் இலங்கையில் சிறுவர்களுக்கான பல சட்டங்கள் இருந்தாலும் சில சட்டங்கள் சிறுவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

குறிப்பாக 16 வயது சிறுமி அல்லது சிறுவர் எதோ ஒரு முறையில் காணாமல் போகும் பட்ஷத்தில் அல்லது காதல் மூலம் ஒருவருடன் விரும்பியோ விரும்பாமலோ சென்று இருந்தால் அந்த சிறுமி தொடர்பாக எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று சட்டத்தில் உள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

16 வயது தொடங்கி இருந்தால் அந்த சிறுவர்கள் தனியாக முடிவெடுக்கும் உரிமை இருக்கின்றது என்பதனால் இந்த சட்டமானது பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் சிறுவர்களின் எதிர்காலம் குறித்து கேள்வியை எழுப்பியுள்ளது.

ஆனாலும் அதே சட்டத்தில் திருமண வயது என்பது 18 வயதை தாண்டியிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இப்படியான சிறுவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் இந்த இரண்டு சட்டங்களுமே இன்று இலங்கையின் அதிகளவிலான சிறுவர் துஸ்பிரயோகங்களுக்கு காரணமாக அமைகின்றது.

உதாரணமாக ஒரு சிறுமியை எடுத்துக்கொண்டால் ஏதோ ஒரு விதத்தில் அந்த சிறுமி தாயாகும் பட்ஷத்தில் அந்த குழந்தைக்கு எவ்வாறான முறையில் பதிவு வைக்க முடியும், திருமண வயது 18 வரும் வரைக்கும் அந்த சிறுமியின் எதிர்காலம் பற்றி ஒரு பாரிய கேள்வி உருவாகியுள்ளது.

மனித உரிமை என்று பார்த்தோமானால் இந்த 16 வயது சட்டம் என்பது சிறுவர்களின் எதிர்காலம் மற்றும் அவர்கள் தாய் தந்தையினரின் பாதுகாப்பில் இருக்க வேண்டும். என்றும் அப்படி காணாமல் போனாலோ அல்லது காதல் என்று போனாலும் இதற்கு உடந்தையானவர்கள் கடத்தல் சட்டத்தின் பிரகாரம் குற்றவாளியாக கைது செய்யவேண்டும் என்பதாகும்.

உண்மையில் சிறுவர்களுக்கு இருக்கின்ற உரிமைகளை பாதுகாப்பாக பார்க்கவேண்டிய ஒரு சில அதிகாரிகளின் அசமந்த போக்கினால் பல சிறுவர்கள் இன்று சமூகத்தில் எம்மை விட்டு பிரிந்து சென்றுள்ளதை பல இடங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது.

அன்மையில் கூட பல இடங்களில் சிறுவர்கள் காணாமல் போதல் அவர்கள் சடலமாக மீட்டல் போன்ற சம்பவங்களும் இடம்பெற்றுக்கொண்டே வருகின்றது. இதை எல்லாம் கருத்தில் கொண்டு இந்த சட்டத்தினை சிறுவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாற்றியமைக்க வேண்டும்.

எத்தனையோ பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் எதிர்க்காலம் தொடர்பாக பல கனவுகளுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டு வருகின்ற போதும் சில சமயங்களில் நல்ல பெற்றோர்களும் தங்களது உயிரை இழக்கின்ற அளவுக்கு இந்த சட்டங்கள் அமைந்துள்ளது.

இவ்வாறான சட்டங்கள் தொடர்பாக சற்று ஆராய்ந்து பார்த்து எதிர்காலத்தில் எமது சிறுவர்களின் எதிர்காலம் தொடர்பாகவும் கரிசனையுடன் செயற்பட வேண்டியது அனைத்து இலங்கை பிரஜைகளின் கடமைப்பாடாகும்.

ஆகவே சிறுவர் உரிமைகள் பாதுகாப்பதற்காக பல அமைப்புகள் இருந்தும் இந்த 2 வகையான சட்டங்கள் தொடர்பாக இதுவரைக்கும் எந்த ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தாமை ஒரு கவலைக்குரிய விடயமாகவும் இந்த சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிக்க உதவும் சட்டத்தை உடனடியாக இரத்து செய்து சிறுவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

Shashikaran Punyamoorthi

SHARE