இலங்கையின் திவால் நிலைக்கு யார் காரணிவாதிகள்..! கண்டு பிடிக்க தயாராகும் ரணிலின் பொறிமுறை!

262

சர்வதேச நாணய நிதியத்தை அணுவதில் தாமதம் மற்றும் சர்வதேச ஆதரவைப் பெறுவதில் தாமதம் ஆகியவை தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்படவுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இதனை முன்மொழிந்துள்ளார்.

இந்த தெரிவுக்குழு, அத்தியாவசிய உணவு, மருந்துகள், எரிபொருள், எரிவாயு மற்றும் அந்நியச் செலாவணி ஆகியவற்றின் கடுமையான தட்டுப்பாடு மற்றும் திவால்நிலைக்கு இட்டுச் சென்ற தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் கண்டறிவதற்கான விசாரணைகளை நடத்தவுள்ளது.

ஏற்கனவே இந்த விசாரணக்காக, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைக்கவேண்டும் என்று கோரப்பட்டபோதும், சர்வகட்சி தெரிவுக்குழுவே சிறந்தது என்று பிரதமர் முன்மொழிந்துள்ளாார்.

அந்நிய செலாவணி இல்லாததால், இரண்டு வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்துவதில் இலங்கை, கடந்த புதன்கிழமையன்று முதல் முறையாக தவறி தவறிவிட்டது.

இந்த விடயம் தொடர்பில் அடுத்த வாரம் நாடளுமன்றத்தில் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து தெரிவுக்குழுவிற்கான வழிமுறைகளை வகுப்பதாக பிரதமர் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையின் திவால் நிலைக்கு யார் காரணிவாதிகள்..! கண்டு பிடிக்க தயாராகும் ரணிலின் பொறிமுறை!

அரசாங்கத்தினால் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கொடுப்பனவுகள் செலுத்தப்படவேண்டியுள்ளன.

இதன் காரணமாகவே எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் தங்கள் பொருட்களை இறக்காமல் இருப்பதறாக காரணம் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

SHARE