இலங்கையின் தீவிரவாத எதிர்ப்பு வரைபின் பிரிவுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் விமர்சனம்

266

una-mccauley-280x187

இலங்கை அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள உத்தேச தீவிரவாத எதிர்ப்பு சட்ட வரைவின் சில பிரிவுகள் குறித்து ஐக்கிய நாடுகள் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலி இந்தக்கருத்தை ஊடகம் ஒன்றுக்கு வெளியிட்டுள்ளார்.

குறித்த உத்தேச சட்டவரைவில் சட்டத்தரணி இல்லாத நிலையில், ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதற்கு, அனுமதிக்கும் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவை குறித்து ஐக்கிய நாடுகள் சபை கருத்திற்கொண்டுள்ளதாக உனா மக்கோலி தெரிவித்துள்ளார்

சட்டத்தரணிகள் இல்லாமல் ஒப்புதல் வாக்குமூலம் பெறுவது மற்றும் சர்வதேச சட்ட நியமங்களின் படி 48 மணித்தியாலங்களாக உள்ள பொலிஸ் தடுப்புக்காவலை, 72 மணித்தியாலங்களாக நீடிப்பது போன்ற பிரிவுகள் முக்கியமானவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE