இலங்கையின் நிலைமாற்றுக்கால நீதிக்கு ஆபத்து சர்வதேச மன்னிப்புச்சபை.

201

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் காரணமாக நிலைமாற்றுக்கால நீதி குறித்த வாக்குறுதிகளிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக   தெரிவித்துள்ளது.

சர்வதேச மன்னிப்புச்சபை தனது ஆண்டறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளது.

தீடீர் என மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டமையும் அதனை தொடர்ந்து உருவாகியுள்ள அரசியல் நெருக்கடிகள் காரணமாகவும் மனித உரிமைகள் மற்றும் நிலைமாற்றுக்கால உத்தரவாதங்கள் எதிர்காலத்தில் ஆபத்துக்களை சந்திக்கலாம் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

இலங்கையும் நேபாளமும் உண்மை நீதி மற்றும் கடந்தகால வன்முறைகளிற்கான இழப்பீடு குறித்த அர்ப்பணிப்புகளில் மிகமெதுவான முன்னேற்றங்களையே கண்டுள்ளன என தெரிவித்துள்ள  சர்வதேச மன்னிப்புச்சபை இரு அரசாங்கங்களும் அரசசார்பற்ற அமைப்புகளிற்கு எதிராக கட்டுப்பாடுகளை விதிக்க முயன்றன  எனினும் எதிர்ப்பு காரணமாக கைவிட்டுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையில் மதவெறுப்பு மீண்டும் தலைதூக்கியது எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

SHARE