இலங்கையின் நீர்க்காக்கை பயிற்சி! இந்தியாவும் சீனாவும் பங்கேற்பு

320

இலங்கையில் இடம்பெறவுள்ள 2015 நீர்க்காக்கை இராணுவ பயிற்சி நடவடிக்கைகளில் இந்தியாவும் சீனாவும் பங்கேற்கவுள்ளன.

இந்த பயிற்சிகளில் வெளிநாடுகளின் சுமார் 2000 முப்படைவீரர்களும் பங்கேற்கவுள்ளனர்.

இந்த தகவலை இராணுவ தலைமையதிகாரி ஜெகத் டயஸ் தெரிவித்துள்ளார்.

புல்மோட்டை முதல் வடக்கு அருகம்பே வரையிலான பிரதேசத்தில் முதல் கட்ட பயிற்சிகள் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகின்றன.

இந்தியா சீனாவை தவிர, இந்தோனேசியா, மலேசியா, நேபாளம், பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் வீரர்கள் இந்த பயிற்சிகளில் பங்கேற்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

காடுகள் சார்ந்த இடங்களை மையமாகக்கொண்டு இந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

SHARE