இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியூஸிலாந்துக்கு விஜயம்!

269

blogger-image-1075572354

இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் 3ஆம் திகதி வரை நியூஸிலாந்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த தகவலை நியூஸிலாந்தின் பிரதமர் ஜோன் கீ வெளியிட்டுள்ளார்.

மேலும், ரணில் விக்கிரமசிங்கவின் விஜயம், தமது இரண்டு நாடுகளுக்கும் இடையிலானஉறவை பலப்படுத்தும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே நியூஸிலாந்தின் பிரதமர் ஜோன் கீ, கடந்த பெப்ரவரியில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.

இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக தொடர்புகள் குறித்துகலந்துரையாடப்பட்டன.

இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், போருக்கு பின்னர் இலங்கை புதிய அத்தியாயத்தில் பிரவேசித்துள்ளதாக ஜோன் கீ குறிப்பிட்டுள்ளார்.

எனவே தமது நாடும் பொருளாதார, மற்றும் அரசியல் தொடர்புகளின் ஊடாக இலங்கையின் நல்லிணக்கத்துக்கு உதவவுள்ளதாக ஜோன் கீ தெரிவித்துள்ளார்.

SHARE