இலங்கையின் போர்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் அவசியம் – கனேடிய பிரதமர்

286

இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளின்போது வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்படவேண்டும் என்று கனடா தெரிவித்துள்ளது.

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் போர்முடிவடைந்த ஏழாவது நினைவுநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் தமது கருத்தை பதிவுசெய்துள்ளார்.

இலங்கையில் போர்முடிவடைந்தநாளை நினைவுகூரும்போது 26 வருட போரினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட பலரை தாம் சந்தித்தவேளையில் அவர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தரும் செய்திகளை கூறினார்கள்

எனவே பாதிக்கப்பட்டவர்களின் காயங்கள் ஆற்றப்படுவதற்காக கடுமையான பணிகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது.

இந்த நிலையிலேயே நீண்டநிலைத்த சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் அடையமுடியும் என்று கனேடிய பிரதமர் கூறியுள்ளார்.

தமிழர்களை பொறுத்தவரை கனடாவில் பல வெற்றிகளை காணப்பதற்கு அவர்கள் நாட்டின் ஒரு அங்கங்களாக உள்ளனர்.

எனவே இலங்கையின் போர் 7ஆம் ஆண்டு நிறைவில் அவர்களுக்கு தாம் அனுதாபத்தையும் கனேடிய தமிழ் வம்சாவளியினருக்கு ஆதரவையும் வெளியிடுவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகம் எதிர்ப்பார்க்கும் பொறுப்புக்கூறலை அடைய கனடா ஊக்கமளிக்கும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

06336357

SHARE