தேசிய மின்சார உற்பத்திக்கு 600 மெகாவோட்ஸ் மின்சாரத்தை வழங்கக்கூடிய மின்சார உற்பத்திக்கான முதலீடு ஒன்றை ஜப்பான், இலங்கையில் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
பிரதி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹர்ச டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் தற்போது விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், அதிவலுக்கொண்ட அனல் மின்சார திட்டம் ஒன்றுக்காகவே ஜப்பானின் முதலீடு அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுடன் மேற்கொள்ளப்படவுள்ள சம்பூர் திட்டத்துக்கு புறம்பாக இது மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்த அவர் மேலதிக தகவல்களை வெளியிடவில்லை.
இதேவேளை ஜப்பான், உள்ளுர் போக்குவரத்திலும் முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்