இலங்கையின் முன்னணி பெண் தொழிலதிபர் சோமா எதிரிசிங்க காலமானார்.

302

இலங்கையின் முன்னணி பெண் தொழிலதிபர் சோமா எதிரிசிங்க காலமானார்.

அவர், 76 வயதில் இன்று காலை காலமானார்.

ஈ.ஏ.பீ. குழும நிறுவனத்தின் தலைவரான சோமா எதிரிசிங்க இலங்கையின் முதனிலை பெண் தொழிலபதிர் மற்றும் வர்த்தகர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1974ம் ஆண்டு ஈ.ஏ.பி. எதிரிசிங்க திடீரென உயிரிழந்தனைத் தொடர்ந்து அவர் சோமா எதிரிசிங்க வர்த்தக நடவடிக்கைகளை பொறுப்பேற்று அபிவிருத்தி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொலைக்காட்சி, வானொலி, நகை அடகுபிடித்தல், தங்க ஆபரண விற்பனை, வாகன குத்தகை, ஏற்றுமதி, ஹோட்டல்துறை, காப்புறுதி, வாகன இறக்குமதி, திரைப்பட விநியோகம், திரைப்பட தயாரிப்பு உள்ளிட்ட 25 நிறுவனங்களை சோமா எதிரிசிங்க வழி நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

SHARE