இலங்கையின் யுத்தம் இடம்பெற்ற வடபகுதியில் 64ஏக்கர் நிலத்திலிருந்து நிலக்கண்ணிவெடிகள் அகற்றவேண்டும்:

339

இலங்கையின் யுத்தம் இடம்பெற்ற வடபகுதியில் இன்னமும் 64ஏக்கர் நிலத்திலிருந்தே நிலக்கண்ணிவெடிகளை அகற்றவேண்டிய தேவையுள்ளதாக குறிப்பிட்டுள்ள இராணுவம் விரைவில் கண்ணவெடிகள் முற்றாக அகற்றப்பட்டுவிடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இராணுவ பேச்சாளர் இன்று செய்தியாளர் மாநாட்டில் இதன தெரிவித்துள்ளார்.
இராணுவம் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் அமைப்புகளுடன் இணைந்து 2000 ஏக்கர் நிலத்திலிருந்து கண்ணிவெடிகளை அகற்றியுள்ளது, இந்த நடவடிக்கை அனேகமாக வடக்குகிழக்கில் இடம்பெற்றுள்ளது.
மீதமுள்ள 64 ஏக்கர் நிலத்திலிருந்து கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
விடுதலைப்புலிகள் சர்வதேசவிதிமுறைகளிற்கு மாறாக நிலக்கண்ணிவெடிகளையும்,மிதிவெடிகளையும் புதைத்துள்ளதால் குறிப்பிட்ட 64 ஏக்கரிலிருந்து கண்ணிவெடிகளைஅகற்றுவது மிகவும் சவாலான விடயம்என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE