இலங்கையின் 25 வீதமானவர்கள் போசாக்கின்மையால் பாதிப்பு

294
இலங்கையின் 25 வீதமானவர்கள் போசாக்கின்மையால் பாதிப்பு - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-

இலங்கையின் 25 வீதமானவர்கள் போசாக்கியின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
மோசமான காலநிலை காரணமாக இவ்வாறு இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மழை வெள்ளம், வரட்சி உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களினாலும் இவ்வாறு உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இலங்கையின் சுமார் 33 வீதமான சனத்தொகையினர் போசாக்கான உணவு வேளைக்காக செலவிட முடியாத வறுமையில் வாடுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
உரிய வாழ்வாதார திட்டங்கள் இல்லாத காரணத்தினால் இவ்வாறு மக்கள் உணவுத் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE