மாவத்தகம பிரதேசத்தில் குறைந்த வருமானத்தில் வாழும் குடும்பம் ஒன்றில் பிறந்த போதிலும் தனது அதீத தொழிநுட்ப ஆர்வத்தின் பயனாக தானாகவே ரொக்கட் தயாரிப்பில் ஈடுபட்டு பரீட்சார்த்தங்களையும் மேற்கொண்டுள்ள திவங்க நிரஞ்சனுக்கு ஜனாதிபதியின் உதவி கிட்டியுள்ளதாக அறியமுடிகிறது.
Sky Touch – 01 Rocket எனும் பெயரில் தான் உருவாக்கியுள்ள 18 கி.மீ பயணிக்கக்கூடிய தொழில்நுட்பம் கொண்ட ரொக்கட் பரீட்சார்த்தம் பற்றி குறித்த இளைஞர் அண்மையில் தகவல் வெளியிட்டுள்ள நிலையில் இது குறித்து ஆராய்ந்து அவருக்குத் தேவையான வசதிகளையும் உதவிகளையும் செய்து தரும்படி அதிகாரிகளைப் பணித்துள்ளார் ஜனாதிபதி.
இதனடிப்படையில் இராணுவத்தின் தொழில்நுட்பப் பிரிவின் உதவியும் ஒத்துழைப்பும் குறித்த இளைஞருக்குக் கிடைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.