இலங்கையில் அமையவுள்ள தை்தொழில் பேட்டைக்கு சீனா முன்மாதிரி  

258
இலங்கையில் அமைப்பதற்கு உத்தேசித்துள்ள கைத்தொழில் பேட்டைக்கு தேவையான பல பாரிய முன்மாதிரிகளை சீனாவின் சொங்சி மாநகரிலுள்ள பானன் சுக்ஆன் கைத்தொழில் பேட்டையில் பெற்றுக் கொள்ள முடியுமாக இருந்ததாக மாநகர அபிவிருத்தி மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சீனாவுக்கு ஐந்து நாள் உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அமைச்சர் அங்குள்ள கைத்தொழில் பேட்டையைப் பார்வையிட்டதன் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.
இலங்கையிலுள்ள பெறுமதி வாய்ந்த மாணிக்கக் கற்களான ரூபி, சபயார் போன்றவற்றின் பெறுமதியை கூட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் “பானன் சுக்ஆன்”முகாமைத்துவ அதிகாரி அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த பானன் சுக்ஆன் கைத்தொழில் பேட்டையுடன் இலங்கை உறவுகளை பலப்படுத்திக் கொள்வது இலங்கையின் கைத்தொழில் நடவடிக்கைகளை வினைத்திறனுள்ளதாக மாற்றிக் கொள்வதற்கு வழிவகுக்கும் எனவும் அமைச்சர் சம்பிக்க  நம்பிக்கை வெளியிட்டார்.
இந்த பானன் சுக்ஆன் தொழிற்பேட்டை, சொஜிங் மாநகர அரசாங்கத்தினால் இவ்வருடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாநகர கைத்தொழில் பேட்டை திட்டத்தின் அடியாக  அமைக்கப்பட்டுள்ள இந்த நகர் 3 வலயங்களாக பிரிக்கப்பட்டு நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிர்மாணப் பணிகள் நிறைவடைந்ததும் பாரியளவில் கைத்தொழில் நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
SHARE