இலங்கையில் ஆரோக்கியமான முன்னேற்றங்கள் : பிரான்ஸ் ஜனாதிபதி பாராட்டு

236

 

இலங்கையில் ஆரோக்கியமான முன்னேற்றங்கள் இடம்பெற்று வருகின்றதை காணக்கூடியதாக இருக்கின்றது என பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்ஸிஸ்கோ ஹொலண்ட் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரான்ஸின் ஜனாதிபதி மாளிகையில் வெளிநாட்டு தூதுவர்களை வரவேற்றும் நிகழ்ச்சி அண்மையில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் இலங்கை தூதுவராக கலந்து கொண்ட திலக் ரணவி ராஜாவிடம் பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகையினை இலங்கை பெற்றுக்கொள்வதற்காக , இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த மேல் ஏற்றுமதி தடையினை நீக்குவதற்கு பிரான்ஸ் வழங்கிய ஒத்துழைப்பிற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் சார்பில் நன்றி தெரிவித்திருந்தார்.

குறித்த நிகழ்வில் பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கை இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஆரோக்கியமான முன்னேற்றங்களை பார்க்கின்றோம். குறிப்பாக இலங்கையானது சர்வதேச சமூகத்துடன் மீண்டும் ஈடுபாட்டுடன் செயற்படுவதானது ஆரோக்கியமான சூழலின் வெளிப்பாடு என அவர் தெரிவித்திருந்தார்.

SHARE