இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்ற மீறல்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து தயாரிக்கப்பட்ட அறிக்கை மார்ச் மாத அமர்வில் சமர்ப்பிக்கப்படாதமை கவலையளிக்கியது. இருப்பினும் அடுத்த செப்ரெம்பர் மாதம் அந்த அறிக்கை வலுவானதான அமையும் என எதிர்பார்க்கிறோம்.

336

 

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்ற மீறல்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து தயாரிக்கப்பட்ட அறிக்கை மார்ச் மாத அமர்வில் சமர்ப்பிக்கப்படாதமை கவலையளிக்கியது. இருப்பினும் அடுத்த செப்ரெம்பர் மாதம் அந்த அறிக்கை வலுவானதான அமையும் என எதிர்பார்க்கிறோம். – இவ்வாறு ஐ.நா. அதிகாரியிடம் வலியுறுத்திக் கூறியுள்ளனர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட அரசியல் விவகாரப் பிரதிநிதி ஜெப்ரி பெல்ட்மன், இன்று சனிக்கிழமை இலங்கை வந்தடைந்தார். இலங்கை வந்த அவரை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இன்று மாலை சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பிலேயே மேற்படி விடயத்தை அவர்கள் ஐ.நா. அதிகாரியிடம் தெரிவித்தனர். இந்தச் சந்திப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சித்தலைவர் மாவை சேனாதிராஜா, கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் இன்று மாலை ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட அரசியல் விவகாரப் பிரதிநிதி ஜெப்ரி பெல்ட்மன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்

SHARE