இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்படவில்லை

311

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்ட விசாரணைகள் குறித்த அறிக்கை இன்னமும் அரசாங்கத்திடம் கையளிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாத இறுதியில் குறிப்பிட்ட அறிக்கை இலங்கை அரசாங்கத்திடம் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்ட போதிலும் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் அறிக்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க ஜெனீவா அமர்வில் சமர்பிக்கப்படவுள்ள அறிக்கையை எதிர்கொள்வதற்காக அரசாங்கம் இரு குழுக்களை அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE