இலங்கையில் கடந்த 2015ஆம் ஆண்டில் இணையக் குற்றங்கள் அதிகளவாக பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தன்னுடைய வருடார்ந்த மதிப்பீட்டில் தெரிவித்தது.
இதன்படி 2015ஆம் ஆண்டில் 2800 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
பெரும்பாலும் சமூக வலைத்தளங்களின் பாவனையாளர்கள் தொடர்பிலேயே அதிகமான முறைப்பாடுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளமையும் மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.