இலங்கையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படாவிட்டால் மீண்டுமொரு யுத்தம் ஏற்படலாம். அமைச்சர் மங்கள சமரவீர.

175

 

இலங்கையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படாவிட்டால் மீண்டுமொரு யுத்தம் ஏற்படலாம் என்று அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.  அண்மையில் ஊடகமொன்றின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர் மங்கள சமரவீர, எமது அரசாங்கத்தின் ஜனநாயக செயற்பாடுகள் இலங்கையில் இதுவரை எந்தவொரு அரசாங்கத்திலும் வெளிக்காட்டப்படாத அளவிற்கு சிறப்பாக காணப்படுகின்றது.பொதுமக்கள் சுதந்திரமாக அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்கின்றார்கள். அது அரசாங்கத்தின் பலவீனம் என்று யாரும் நினைக்கக்கூடாது. ஜனநாயகத்துக்கு அரசாங்கம் மதிப்பளித்து எதிர்க்குரல்களுக்கும் இடமளிக்கின்றது.

ஜனநாயகம் தொடர்பாக இந்த அரசாங்கத்துக்கு 100 இற்கு 100 புள்ளிகளை வழங்கலாம். அந்தளவுக்கு ஜனநாயகம் மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதுகாத்துள்ளோம். அதேபோன்று இனங்களுக்கிடையிலான நல்லிணக்கமும் கட்டியெழுப்பப்பட வேண்டும். இல்லையேல் மீண்டுமொரு யுத்தத்தை நாடு எதிர் கொள்ள நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE