இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு மனிதக்கடத்தல் செயற்பாடுகள் இன்னும் தொடர்வதாக அவுஸ்திரேலியா குற்றம் சுமத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
அகதிகள் விடயம் குறித்து அந்த நாட்டின் செனட்சபையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் விவாதம் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது கருத்துரைத்த அவர், ஆட்கடத்தல்களை தடுக்க இலங்கையுடன் தொடர்ந்தும் அவுஸ்திரேலியா ஒத்துழைக்கும் என்று உறுதியளித்தார்.
அத்துடன் சட்டவிரோத படகு அகதிகள் தொடர்பில், அவுஸ்திரேலியா பின்பற்றும்கொள்கையிலும் மாற்றம் ஏற்படுத்தப்படாது என்றும் டட்டன் குறிப்பிட்டார்.