இலங்கையில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதனை அறிந்து கொள்ளாத சிலரின் அறியாமை குறித்த அதிர்ச்சி புகைப்படங்கள்

177

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் தற்போதும் மழை பெய்து வருவதால் ஆபத்தான நிலை நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

அடைமழையைத் தொடர்ந்து நீர்த்தேக்கங்களின வான் கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதனை அறிந்து கொள்ளாத சிலரின் அறியாமை குறித்து புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ள கொட்டுகச்சி, கச்சிமடுவ நீர்த்தேக்கத்தின் மதில் மீது நின்று, சிலர் மீன் பிடித்துள்ளனர்.

குறித்த பகுதி ஆபத்தான பிரதேசமாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அதனை கருத்திற் கொள்ளாமல் நீரில் அடித்துச் செல்லும் மீன்களை பிடிப்பதற்கு சிலர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE