இலங்கையில் எழுபதாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் மாயம் – பான் கீ மூனின் குழு

227

625-256-560-350-160-300-053-800-461-160-90

ஐக்கிய நாடுகள் சபையின் 33 வது கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது.

குறித்த கூட்டத் தொடரில் கலந்து கொள்ள சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் லங்காசிறியுடன் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

இதன் போது நடைபெற்று வரும் கூட்டத் தொடரில் அநீதி இழைக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பெறுதியான தீர்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

உலகில் நடைபெற்ற முக்கிய போர்களில் இழைக்கப்பட்ட அநீதிகளை தடுக்க தவறவிட்டது போல் இலங்கையில் நடைபெற்ற அழிப்புகளையும் தடுக்க தவறியமை தொடர்பில் பான் கீ மூன் உணர்ந்து கூறியமையை சிவாஜிலிங்கம் நினைவு படுத்தியிருந்தார்.

மேலும் தற்போது ஐக்கிய நாடுகள் இலங்கை தொடர்பில் கொண்டுள்ள நிலைப்பாடு, தீர்மானங்கள் போன்றவற்றை கூறினார்.

SHARE