இலங்கையில் ஏற்பட்ட பிணைப்பு வேறு எந்த நாட்டிலும் ஏற்படவில்லை: இந்திய பிரதமர்-மோடிக்கும் புரியாமல் போன இலங்கையின் அரசியல்

463

 

இலங்கையின் தற்போதைய அரசியல் கலாச்சாரம் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆச்சரியம் வெளியிட்டுள்ளார்.

modi-narendra ModiRajnathKejriwal Narendra Modi (5) Yal_mody

இந்திய பிரதமர் கடந்த வாரம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

இலங்கையின் அரசாங்கம் கொஞ்சம் சிக்கலானதாக காணப்படுகிறது. நீங்கள் அனைவரும் சகல இடங்களிலும் இருக்கின்றீர்கள் என மோடி கூறியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், பத்தரமுல்லையில் உள்ள உணவகம் ஒன்றில் நடந்த விருந்தில் கலந்து கொண்ட போதே மோடி இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த விருந்தில் அமைச்சர்களை தவிர எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா, முன்னாள் அமைச்சர்கள் ஜீ.எல்.பீரிஸ், ஜோன் செனவிரட்ன, சுசில் பிரேமஜயந்த, தினேஷ் குணவர்தன ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

தற்போதைய ஜனாதிபதியின் கட்சியை சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் இருப்பதும், முன்னர் எதிரணியில் இருந்தவர்கள் தற்போதைய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விடயத்தையும் இந்திய பிரதமர் மோடியால் புரிந்து கொள்ள முடியாது போனதாக தெரிவிக்கப்படுகிறது.

 

SHARE