இலங்கையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பில் மீண்டும் சர்ச்சை

305
 isi
இலங்கையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பில் மீளவும் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிலர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொண்டுள்ளதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இந்த சர்ச்சை எழுந்துள்ளது.
மத்திய மாநில அரசாங்கங்கள் இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்த விசாரணைகளை தற்போது இலங்கை பக்கம் திரும்பியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டில் இலங்கையர்கள் இருவர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொண்டமை குறித்து இலங்கை அரசாங்கம் விசாரணைகளை நடத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்களில் இணைந்து கொண்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இலங்கையின் ஊடாக சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த அடி;பபடையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறனெனினும் அண்மையில் பங்களாதேஸில் இடம்பெற்ற தாக்குதல்களின் போதும் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்டதரப்பினர் அவ்வாறான எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது எனவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் திட்ட வட்டமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
SHARE