இலங்கையில் சாத்தியமான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன – ஐக்கிய நாடுகள் செயற்குழு

259

srilanka1

இலங்கையில் சாத்தியமான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் இன்னும்பல விடயங்களை செய்யவேண்டியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல்ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான செயற்குழு தெரிவித்துள்ளது.

இதில், குறித்த சம்பவங்களுக்கு காரணமானவர்கள் நீதிக்கு முன் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே முக்கியமானதாகும் என்று செயற்குழு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் போன்ற விடயங்கள் முன்னேற்றகரமானவையாகும் என்று குழு தெரிவித்துள்ளது.

தமது இலங்கை விஜயத்தின்போது இந்த விடயங்களை தாம் அவதானித்ததாக நேற்று ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையில் குறித்த குழு அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக நீதிப்பொறிமுறைகளின்போது சர்வதேச பங்களிப்புக் குறித்து இலங்கை ஆராயவேண்டும் என்றும் அந்தக்ழு பரிந்துரை செய்துள்ளது.

இதேவேளை, இந்த அமர்வின் போது கருத்துரைத்த இலங்கையின் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கான வதிவிடப்பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க, தமது நாடு, ஐக்கிய நாடுகளின்செயற்குழு, ஒத்துழைப்புடன் செயற்படும் என்று தெரிவித்துள்ளார்.

உண்மையை கண்டறிதல், நீதிக்கான உறுதி மற்றும் மீண்டும் எழாத பிரச்சினை என்பவை தொடர்பில் தமது அரசாங்கம் உறுதியுடன் செயற்படுவதாகவும் ரவிநாத கூறியுள்ளார்.

SHARE