பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டு நாடுபூராகவும் 6 லட்சம் குற்றவாளிகள் உள்ளார்கள் என காவல்துறை ஊடக பேச்சாளர் பிரிசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற பல குற்றங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் அந் நபர்கள் என உறுதியாகியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சேயா என்ற சிறுமி கொலை செய்யப்பட்டமை, உட்பட அதற்கு முன்னர் இடம்பெற்ற பல குற்றங்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டியவர்களும் அக் குற்றவாளிகள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு முழுவதும் தற்காலிகமாக தங்கும் வசதியை கொண்டுள்ள குற்றவாளிகள் காவல்நிலையத்தில் பதிவு செய்வதற்கு காவல்துறை விடுத்துள்ள உத்தரவு தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இதன் போது இலங்கையில் வசிக்கும் 2 கோடி மக்களில் 3 வீதத்திற்கு சமமான மக்கள் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளாகும்.