இலங்கையில் பேஸ்புக் ஊடாக பாடசாலை மாணவிகளை பாலியல் வலைக்குள் வீழ்த்தும் கும்பல் – அதிர்ச்சித் தகவல்கள்.

362

இலங்கையில் பேஸ்புக் ஊடாக பாடசாலை மாணவிகளையும் பருவ வயது பெண்களையும் பாலியல்கும்பல் தமது வலைக்குள் வீழ்த்தி வருவதாக அதிர்ச்சித் தகவல்களை இலங்கை தேசிய சிறுவர் பாதுகாப்புப் பிரிவினர் வெளியிட்டுள்ளனர்.

பாடசாலை, தனியார் வகுப்புகளுக்குச் செல்லும் பருவமடைந்த சிறுமிகளையும் மாணவிகளையும் பேஸ்புக் ஊடாகத் தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஆபாசத் தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்பி அவர்களை தம் வசப்படுத்தி பாலியல் தேவைகளுக்காக இக் கும்பல்கள் பயன்படுத்தி வருவதாகவும் இவ்வாறான சம்பவங்கள் இலங்கையின் எல்லா மாவட்டங்களிலும் இடம்பெற்று வருவதாகவும் இலங்கை தேசிய சிறுவர் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.School-Love

SHARE