இலங்கையின் ஜனாதிபதியாக சந்திரிக்கா இருந்தபோது 2003 நவம்பர் 4ம் திகதி அன்று ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய மூன்று அமைச்சர்களை பதவியில் இருந்து தூக்கினார்.
பாதுகாப்பு , உள்துறை மற்றும் தொலைத்தொடர்பு ஆகிய பொறுப்புகளை தன் கட்சியை சேர்ந்தவர்களிடம் ஒப்படைத்தார்.
20வது சட்ட திருத்தத்தை நிறைவேற்ற ஐக்கிய தேசிய கட்சியின் உதவி அவருக்கு தேவை. எனவே இந்த விவகாரத்தில் அவர் சந்திரிக்காவின் செயலை வைத்தே ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவை பெற்றுவிடலாம்.
அவரது இந்த செயலுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
மேலும் அடுத்த சில மாதங்களில் நாடாளுமன்றம் கலைக்க்படுவதற்கும் இது ஒரு காரணமாக அமைந்தது.
இதில் கவனிக்கத்தக்க விடயம் என்னவென்றால் 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அவரது கட்சி தோல்வி அடைந்ததால் அந்த மூன்று அமைச்சர்களிடமிருந்து அவர்களது பதவியை சந்திரிக்கா பறித்ததுமே அவர் சட்டபூர்வமாக ஆட்சி உரிமையை இழக்க நேரிட்டது.
மேலும் நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டு இருந்தது. அவரது செல்வாக்கும் சரியத் தொடங்கியது.
இருந்தாலும் துணிச்சலாக அவர் இந்த நடவடிக்கையை எடுத்தார். இந்த செயல்களின்மூலம் ஏற்பட்ட விளைவுகள் ஒரு பக்கம் இருந்தாலும் சந்திரிக்காவுக்குள் இருந்த துணிச்சல் ஜனாதிபதி என்னும் பதவிக்கு இருந்த அதிகாரத்தை வைத்து தான் நினைத்ததை செய்ய வைத்தது.
இதிலிருந்து மைத்திரி பால ஸ்ரீசேன ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது 19வது சட்டதிருத்தத்துக்கு பிறகு சந்திரிக்காவுக்கு இருந்த அதிகாரம் மைத்திரிக்கு இல்லை என்பது உண்மை தான்.
எனினும் 2003 ஆம் ஆண்டு ஆட்சி அமைக்கும் போது சந்திரிக்காவுக்கு இருந்த புகழைவிட அதிகமாக புகழ் மைத்திரிபால ஸ்ரீசேனாவுக்கு உள்ளது.
மேலும் 19ஆவது சட்டதிருத்தத்துக்கு பின்னரும் இலங்கையில் அதிகாரம் மிக்க நபராகவே அவர் இருந்து வருகிறார். அரசியல் சாசனத்தில் மாற்றம் கொண்டுவரவும் அரசியல் சமன்பாட்டில் திருத்தம் மேற்கொள்ளவும் மற்றும் பல உரிமைகள் அவருக்கு உள்ளது.
இந்நிலையில் இலங்கையில் பொது தேர்தலை நடத்துவதற்கு ஆர்வமாக இருக்கும் ஐக்கிய தேசிய கட்சி, தேர்தல் விவகாரங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள மைத்திரி செய்யும் முயற்சிகளை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சேர்ந்தவர்களும் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று கோஷம் எழுப்பி வருகின்றனர்.
ஒருவேளை தேர்தலில் சீர்திருத்தம் செய்தே ஆக வேண்டும் என்று மைத்திரி விரும்பினால் தேர்தலுக்கு முன்பாகவே 20வது சட்டதிருத்தத்தை அவர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தாக வேண்டும். அதற்கு அவர் சந்திரிக்காவின் வழியையே பின்பற்றியாக வேண்டும்.

அதாவது அவர் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களை தூக்கிவிட்டு புதிய மந்திரி சபை அமைத்தால் அடுத்து வரவுள்ள தேர்தலில் ஐதேக கண்டிப்பாக அநேக இடங்களில் தோல்வியை சந்திக்க கூடும் , மேலும் இதன் மூலம் தனது கட்சியிலும் மைத்திரியால் உறுதியான நடவடிக்கைகள் எடுக்க முடியும்.
பிரதமருக்கு எதிராக மஹிந்தவை சேர்ந்தவர்கள் தாக்கல் செய்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் இதற்கு சிறிது தடையாக இருக்கும். எனினும் அதை எளிதாக சமாளித்து விடலாம்.
எனவே சந்திரிக்கா வழியை பின்பற்றுவது தான் சிறிசேனாவுக்கு சிறந்ததாக இருக்கும். மைத்திரிபால சிறிசேனா இலங்கை சுதந்திர கட்சியின் தலைவராக உள்ளவர். மேலும் நாட்டின் ஜனாதிபதியாகவும் உள்ளார்.
எனவே அவரால் பல காரியங்கள் செய்யமுடியும். எதுவுமே செய்யாமலும் இருக்கமுடியும். எனவே எந்த வழியை தேர்ந்தெடுக்கலாம் என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.