இரண்டாவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்க கொழும்புக்கு வருகை தந்திருந்தார். இந்த நிலையில், நேற்று (01) முற்பகல் ஜனாதிபதியை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தித்துள்ளார்.
இதன்போதே அவ் மேற்கண்ட விடயத்தைக் கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்து சமுத்திர வலய நாடுகளின் பிரதான பொருளாதார வளமாகக் காணப்படும் சமுத்திரத்தின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு முன்னுரிமையளித்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தினார்.
இந்து சமுத்திர வலயத்தில் அமைந்துள்ள நாடுகளின் பொருளாதார மற்றும் மின்சக்தி தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கான முக்கிய போக்குவரத்து ஊடகமாக இந்து சமுத்திரம் விளங்குவதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதனூடாக நாட்டு மக்களுக்கு நேரடித் தாக்கங்கள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இந்து சமுத்திர வலய நாடுகளிலும், வலயத்திலும் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதில் இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு நேரடியாக தொடர்புபடுகிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அண்மையிலுள்ள நட்பு நாடு என்றவகையில் இந்தியா இலங்கைக்கு வழங்கி வரும் ஒத்துழைப்புக்கு ஜனாதிபதி, இதன்போது இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
இந்த நிலையில், இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் தொன்றுதொட்டு காணப்படும் வலுவான உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளின் மக்களின் நன்மைக்காகவும், முன்மொழியப்பட்டுள்ள புதிய இருதரப்பு பொருளாதார திட்டங்களைத் துரிதப்படுத்துவதற்கு இந்தியா அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கிடையே விரிவான சுமுக உறவுகள் மற்றும் அந்நியோன்ய அரசியல் நிலைமைகள் காரணமாக எந்தவொரு பிரச்சினையையும் சுமுகமாக தீர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு காணப்படுவதாக இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் குறிப்பிட்டார்.