இலங்கையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகளை வெளிநாட்டில் பரிசோதனைக்கு அனுப்ப மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

364

 

 இலங்கையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகளை வெளிநாட்டில் பரிசோதனைக்கு அனுப்ப மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

mannar-grave2

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலையத்திற்கு அருகில் குடிநீர் குழாய் போடுவதற்கு நிலத்தை தோண்டிய போது, அங்கு மனித எலும்புகள் கண்டுபிடிக்கபட்டன. அதை தொடர்ந்து அந்த இடத்தை முழுமையாக தோண்டுவதற்கு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து அந்த பகுதியை தோண்டிய பிறகு 88 பேர்களுடைய எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. இதனை விசாரித்த காவல் துறையினர் ஆதிகாலத்தில் வாழ்ந்த கிராமவாசிகள் இறந்தவர்களை புதைப்பதற்க்காக பயன்படுத்திய குழியில் தான் இந்த எலும்புகள் கண்டெடுக்கப்பட்டது என தெரிவித்தனர்.

இருந்த போதிலும் திருகேதீஸ்வரம் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், மன்னர் படைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட காலத்தில் அந்த பகுதியில் காணாமல் போனவர்களை கொலை செய்து ரகசியமாக இந்த இடத்தில் புதைத்திருக்கலாம் என பொதுமக்கள் இடையே சந்தேகம் எழும்பியுள்ளது. இதைதொடர்ந்து புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளை எந்த காலத்தை சேர்ந்தது என கன்டுபிடிக்க வெளிநாட்டில் சோதனைக்கு அனுப்ப மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SHARE