இலங்கையில் மரணத்தில் முடிந்த திருமண நிகழ்வு

258
 

கிரியுல்ல அதுருவெல பிரதேசத்தில் கிணற்றில் வீழ்ந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றிரவு 11 மணியளவில் அதுருவெல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திருமண விருந்துபசார நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்த மூன்று பேர் இவ்வாறு கிணற்றில் வீழ்ந்து பலியாகியுள்ளனர்.

திருமணம் விருந்துபசார நிகழ்வு நடத்தியவர்கள், விருந்துபசார மண்டபத்தில் காணப்பட்ட கிணற்றை பலகைகள் கொண்டு மூடியுள்ளனர்.

இது பற்றி தெரியாத ஒருவர் பலகையின் மீதேறியிருந்தார் எனவும் அதன் போது பலகைகள் உடைந்து அவர் கிணற்றுக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

அவரை மீட்பதற்காக கயிறு கொண்டு இறங்கிய மேலும் இருவரும் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.

கிணற்றில் வீழ்ந்த மூவரையும் மீட்டு தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்துள்ளனர்.

SHARE