இலங்கையில் மிக மோசமான போர் குற்றங்கள் இடம்பெற்றுள்ளமை ஐ.நா விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது

339

இலங்கையில் மிக மோசமான குற்றங்கள் இடம்பெற்றுள்ளது ஐ.நா மேற்கொண்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயித் அல்குசைன் தெரிவிக்கவுள்ளார்.
சிறிதுநேரத்தில் ஆரம்பமாகவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 30 அமர்வில் ஆற்றவுள்ள உரையிலேயே அவர் இதனை குறிப்பிடவுள்ளார்.

இலங்கையின் புதிய அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ள தொலைநோக்கும் அர்ப்பணிப்பும் வரவேற்க தக்கவை, எனினும் இலங்கையர்களிற்காகவும், தனது நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கும் முடிவுகளை எட்டகூடிய பொறுப்புக்கூறும் நடவடிக்கையை உறுதிப்படுத்தவேண்டிய  கடப்பாடு எங்களிற்குள்ளது குறிப்பிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன

SHARE