வங்காள விரிகுடாவின் தாழ்மட்ட குழப்பநிலை விரிவடைந்து தாழமுக்கமாக மாற்றமடைந்துள்ளது.
இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழையுடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் முகில் நிறைந்தும் காணப்படும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவான மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் மொஹமட் சாலிஹீன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டில் எற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக தாழிறக்கம் ஏற்பட்டு மலை நாட்டு புகையிரத பாதையில் இஹல கோட்டே மற்றும் பலனவிற்கும் இடையிலான புகையிரத சேவை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இதனால் நாட்டு மக்கள் அச்சத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.