இலங்கையில் முதலீடு செய்ய தயங்கும் அமெரிக்கர்கள்

217

இலங்கையில் இடம்பெற்று வரும் ஊழல்கள் மற்றும் அரசாங்க நிர்வாக சீரின்மை காரணமாக அமெரிக்காவின் முதலீட்டாளர்கள் தமது நம்பிக்கையை இழந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது இலங்கையின் தேசிய பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் என்பவற்றுக்கு பாரிய தாக்கத்தை உண்டு பண்ணும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் இந்த விடயம் வெளியாகியுள்ளது.

சுங்கம் மற்றும் குடிவரவுத் துறைகளில் ஊழல்கள், மத்திய வங்கி மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு என்பவற்றில் தேவையற்ற தலையீடுகள் போன்றவை இந்த ஆய்வின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இந்தநிலையில் அமெரிக்காவின் இலங்கைக்கான முதலீடுகளில் அதிகரிப்பை காண முடியவில்லை.

கடந்த வருடத்தைக் காட்டிலும் இந்த வருடத்தின் 6 மாத காலப்பகுதியில் குறைந்தளவானஅதிகரிப்பையே காண முடிந்துள்ளது என்று அமெரிக்காவின் வணிகக் கழக பிரதிநிதி ஒருவர் கொழும்பில் வைத்து தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது 17 அமெரிக்க நிறுவனங்கள் செயற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE